கொழும்பு, காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிராக இராஜதந்திரத் தடைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை கொண்டு வருவது தொடர்பில் விவாதங்கள் இடம்பெறுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை தேசிய சீர்திருத்த செயலகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசியல் பங்காளிகள் மத்தியில் அவர் இன்று உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை, கவனத்தில் கொண்டு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் முக்கிய நகரங்களில் இலங்கை மீது தூதரகத் தடைகளை விதிக்கவும் மற்றும் பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்தவும் விவாதங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது நடைமுறைப்படுத்தப்பட்டு பொருளாதாரத் தடைகள் ஏற்பட்டால். இலங்கை நாட்டின் சாதாரண குடிமக்களாகவே பாதிக்கப்படுவார்கள்.
எனவே அரசியல் குழுக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த. உயர்மட்ட அதிகாரிகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post