இலங்கை மின்சாரசபை இந்த வருடத்தில் மாத்திரம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் காலங்களில் இரண்டு முறை மின் கட்டணம் 75% உயர்த்தப்பட்டாலும் இந்த இழப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் தொடர்ச்சியான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக டீசல் அனல்மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுவதால் இந்த இழப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இது தவிர, நிலக்கரி விலை உயர்வு மற்றும் அவற்றின் இறக்குமதிக்கான கப்பல் தாமதக் கட்டணங்கள் ஆகியவையும் இந்த இழப்புகள் அதிகரிப்பதற்கான மற்றொரு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதன் மூலம், சபையை நட்டமடைய செய்து நிறுவனங்களை தனியாருக்கு விற்பதே சிலரின் நோக்கமாக உள்ளதாக தொழிற்சங்கம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.
Discussion about this post