இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை
மேலும் பலப்படுத்த இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர்
சீ சென்ஹொங் கூறியுள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங்வுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா
அபேவர்த்தனவுக்கும் மத்தியில் நேற்று முந்தினம் (புதன்கிழமை) நடைபெற்ற
கலந்துரயாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனை பின் தொடர்ந்து இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு
சபாநாயகர் நன்றி கூறினார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச்
செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீரவும் பங்க்குபெற்றியமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post