இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் அடிப்படை சுகாதார சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான உதவிகளை வழங்குவதில் உலக சுகாதார ஸ்தாபனம் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியால் நாட்டில் நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு சுமார் 30 சதவீதத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருந்து இறக்குமதிக்காக 400 மில்லியன் டொலர்கள் நிதியுதவி கிடைத்துள்ளது என்றும், அதன் மூலம் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post