கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை
மீட்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை
வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக
இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க
இதற்கு மேலதிகமாக அதிக பணம் தேவைப்பட்டால் இலங்கை மத்திய வங்கி அதனை
வழங்க தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post