இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் நாணய மாற்று விகிதங்களை மீறி நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அவ்வாறு செயற்படும் நாணய மாற்றாளர்களின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்குப் புறம்பாக நாண மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது அந்நியச் செலாவணிச் சட்டத்துக்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post