இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று(23) கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதமான நிலையான வைப்பு வசதி வீதம் 8.25 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நிலையான கடன் வசதி வீதம் 9.25 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் 0.25 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post