இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவு ஜுலை மாதம் முதல் 06 மாத காலத்திற்கு குடும்பங்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடுப்பனவு மூலம் 3.2 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என அவர் கூறியுள்ளார்.
நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post