இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி
நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சந்தையில் இருந்து 250 கோடி அமெரிக்க டொலர்
(கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய்) கடனை அவசரமாகப் பெற எரிசக்தி அமைச்சு
முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட கான்செப்ட் குளோபல் என்ற நிதி
நிறுவனத்திடமிருந்து கடன் பெற அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடனுக்கு 2 வருட சலுகைக் காலமும், திருப்பிச் செலுத்தும் காலம் 12
வருடங்களாகவும் உள்ளதாகவும் இந்த கடன் 3 சதவீத ஆண்டு வட்டி வீதத்தில்
பெறப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு
சுமார் 330 மில்லியன் டொலர் கடன்பட்டிருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய
கம்மன்பில அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
கூட்டுத்தாபனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இரு அரச
வங்கிகளுக்கிடையே நிலுவையில் உள்ள கடன் கடிதங்களை தீர்க்க முடியவில்லை என
தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post