தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்க, பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், பிரதமர் மஹிந்த ராஜபகசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பினார்.
இந்த கடிதம் ஊடகங்களில் வெளிவந்த பின்னர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரை சந்தித்து, பேச்சு நடத்தியுள்ளனர். அவ்வேளையிலேயே புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கோரியுள்ளனர் .
எனினும், ராஜபக்சக்களின் விசுவாசியான தினேஷை பிரதமராக ஏற்பதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தயாரில்லை எனக் கூறப்படுகின்றது.
Discussion about this post