இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும், அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் புதிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையம், யுனிசெப் உடன் இணைந்து, பழைய, புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மோதல்கள் நிலவிய பகுதிகளில் காணப்பட்ட பல்கலைக்கழங்களில் ஆய்வுகள் நடத்தியிருந்தன.
“அண்மைக் காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை , பால் நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது” என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 51 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாய்மொழி துன்புறுத்தலுக்கும், 34.3 சதவீதமானோர் உளவியல் வன்முறைக்கும், 23.8 சதவீதமானோர் உடல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கும், 16.6 சதவீதமானோர் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர். கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவர்கள் முகம் கொடுக்கிறார்கள் எனவும், கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களும் ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே பதிவாகியுள்ளன.
பகிடிவதை பெரும்பாலும் முதல் வருடத்தில் மட்டும் நடக்கின்றது என்று கருதப்பட்டாலும், மாணவர்களின் முதலாம் ஆண்டு முடிவுடன் இந்தத் துன்புறுத்தல் முடிவுக்கு வராது என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post