சீனா தமது இராணுவ பலத்தை வியாபிக்கும் நோக்குடன், இலங்கை உட்பட 13
நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நிலையங்களை
ஸ்தாபிப்பதற்கான வாய்ப்புள்ளதாக பென்டகனின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கையிலுள்ள சீன தூதரகம், அனைவரும்
திருடுகிறார்கள் என ஒரு திருடன் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா தற்போதைக்கு 750-க்கு மேற்பட்ட வெளிநாட்டு இராணுவ முகாம்களை
ஸ்தாபித்துள்ளதை சீன தூதரகம் நினைவூட்டியுள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் சீனாவின் அணுவாயுத எண்ணிக்கையை ஆயிரமாக
அதிகரித்துக்கொள்ள முடியும் என பென்டகன் வெளியிட்ட அறிக்கைக்கு சீன
வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் பதிலளித்துள்ளார்.
சீனாவில் அணுவாயுத அச்சுறுத்தலை அதிரிக்கப்பதற்கு அமெரிக்கா இந்த அறிக்கை
ஊடாக முயற்சித்துள்ளது. சீனாவுக்கு எதிராக அணுவாயுதங்களை பயன்படுத்தாத
எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் சீனா அணுவாயுத அச்சுறுத்தலை விடுக்காது
என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உணவு உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்திக்
கொள்ளுமாறு சீன வர்த்தக அமைச்சு அந்நாட்டு மக்களுக்கு
அறிவுறுத்தியுள்ளது.
சீரற்ற வானிலை, வலுசக்தி தட்டுப்பாடு மற்றும் COVID-19 காரணமாக
விநியோகங்களுக்கு தடங்கல் ஏற்பட்டதால் உருவாகக்கூடிய பிரச்சினைகளை
குறைத்துக்கொள்வதற்காக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென சர்வதேச ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
Discussion about this post