நீண்டகால தீர்வுகளை காண்பதற்கான துரிதமான நடவடிக்கைகளில் இலங்கை தலைவர்கள் ஈடுபடவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி பின்னர் தனது பதவி விலகலை அறிவித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி பதவி விலக தயாராகின்ற இந்த வேளையில் இலங்கை நாடாளுமன்றம் இந்த தருணத்தை நாட்டின் மேம்பட்ட நிலைக்கான அர்ப்பணிபை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும், தனியொரு அரசியல் கட்சியை அடிப்படையாக கொண்டு செயற்படக்கூடாது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தையோ அல்லது புதிதாக அரசமைப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படக்கூடிய அரசாங்கத்தையோ, நீண்டகால பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை விரைவாக அடையாளம் கண்டுகொண்டுதீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்று, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக எச்சரித்துள்ள அமெரிக்கா வன்முறைகள் குறித்தும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான குரல் எழுப்புவதற்கான உரிமையுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
Discussion about this post