மனித உரிமை செயற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த சர்வதேச பெண்கள் அமைப்பின் நிறுவுநருமான இலங்கை தமிழ்ப் பெண் ராஜி பற்ரிசன் பயணித்த வாகனம் மீது அமெரிக்காவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினரான டானி டேவிஸால் ஒழுங்குபடுத்தபட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த ராஜி அங்கு வழங்கப்பட விருது ஒன்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
நிகழ்வுக்கு குடும்ப சகிதம் சிகாகோவின் நெடுஞ்சாலை வழியே காரில் சென்று கொண்டிருந்த வேளை இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வாகன கண்ணாடி வழியே சுட்டுவிட்டு வேகமாக தப்பிச்சென்றுள்ளனர்.
வழமைக்கு மாறான இருக்கையில் இருந்ததால் ராஜி உயிர் தப்பியுள்ளார். சிக்காக்கோ பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Discussion about this post