சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளதால் நாட்டில் நிதி மற்றும்
உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச ஊடங்கள் செய்தி
வெளியிட்டுள்ளமை அடிப்படையற்றது.
கொவிட் தாக்கத்தினால் இலங்கை மாத்திரமல்ல பொருளாதார ரீதியில்
முன்னேற்றமடைந்த நாடுகள் கூட பொருளாதார ரீதியில் ஏதோவொரு வழிமுறையில்
பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித்
நிவாரட்கப்ரால் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் இம்மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசியை
செலுத்தி சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் நாட்டை வழமை நிலைக்கு
கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்திற்குள்
எம்மால் சீர் செய்ய முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் அஜித்
நிவாரட்கப்ரால் தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று
வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்
ReplyForward |
Discussion about this post