இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் டொக்டர் சஞ்சய ஹெய்யன்துடுவ இதனை தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் ஆகியன காரணமாக மேல் மாகாணத்தில் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமத்திய, வடமேல், ஊவா ஆகிய மாகாணங்களிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவாகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளினால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post