இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால்
வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும்
பிரிட்டன், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின்
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களைச் தொடர்ச்சியாக
வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ
டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான
பல்வேறு விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48
ஆவது கூட்டத்தொடரில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் வெளிப்படுத்தப்பட்ட
கரிசனைகளை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும்
சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான
அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ச்சியாக வழங்கும் என்று அப்பதிவில்
குறிப்பிட்டுள்ளார்
Discussion about this post