இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவும், சீனாவும் இணைந்து இலங்கைக்கு உதவுவது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளன.
இலங்கைக்கான அமெரிக்க மற்றும் சீன தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போதே இருநாடுகளும் இணைந்து இலங்கைக்கு உதவுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தளத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லா விதத்திலும் போட்டி நிலவும் நிலையில், இலங்கை விவகாரத்துக்காக இவ்விரு நாடுகளும் சங்கமித்துள்ளன.
Discussion about this post