பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை ஏதிலிகளை பாதுகாப்பாக வேறு நாட்டுக்கு அனுப்புவதற்கு பிரிட்டன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த ஏதிலிகள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவிக்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, இந்த ஏதிலிகள் சாகோஸ் தீவுக்கூட்டத்தை சேர்ந்த டியேகோ கார்ஷியா தீவில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர். சாகோஸ் தீவுகளின் உரிமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக பிரித்தானிய அதிகாரிகள் இந்த ஏதிலிகள் தொடர்பான அவசர முடிவொன்றை எடுக்க வேண்டியுள்ளது என்று சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அந்த தீவுகளின் உரிமை தொடர்பாக பிரித்தானியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர், சாகோஸ் தீவுகள் மொரீஷியஸ்க்கு உரித்தானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Discussion about this post