இலங்கையில் இளைஞர்களை ஏமாற்றி மனித கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவரை கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்த நாட்டைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட இளைஞர்களை தாய்லாந்துக்கு சுற்றுலா விசாவில் சீன நபர் ஒருவர் அனுப்பியுள்ளார்.
தாய்லாந்து சென்ற குழுவினர் பின்னர் சட்டவிரோதமாக அங்கிருந்து மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு படகு மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு ஒரு கட்டிடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது அந்த நாட்டில் போலியான சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி பெண்களைப் போல் நடித்து பணக்காரர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெறுமாறு அவர்களிடம் கூறப்பட்டது.
அத்தோடு, ஒரு நாளைக்கு இதுபோன்ற மூன்று நபர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ஆட்கடத்தல்காரரான சீன பிரஜை கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post