ருவாண்டா (Rwanda) நாட்டுப் பாதுகாப்புப் படையுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே தமது நாட்டு இராணுவத்தின் நோக்கமாக இருப்பதாக இலங்கை (Sri Lanka) ஆயுதப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா (shavendra silva) தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு நேற்று முன்தினம் (05) விஜயம் செய்த போதே சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது தூதுக்குழுவினர் ஜூலை ஐந்தாம் திகதி கிகாலியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஜுவெனல் மரிசமுண்டாவைச் சந்தித்துள்ளனர்.
இலங்கை ஆயுதப்படைஇதன்போது, இலங்கை ஆயுதப்படைக்கும் ருவாண்டா படைகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
முன்னதாக சவேந்திர சில்வா கிகாலியில் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலை நினைவிடத்திற்கு விஜயம் செய்து 1994 துட்ஸி இனப்படுகொலையில் இறந்தோருக்கு தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.ஜூலை நான்காம் திகதியன்று அமஹோரோ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ருவாண்டா விடுதலையின் 30 ஆண்டுகள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர் சவேந்திர சில்வாவும் அவரது பிரதிநிதிகளும் இனப்படுகொலைக்கு எதிரான பிரசார அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post