அமைச்சரவைக்குள் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.ஜனாதிபதி கோட்டாபய
ராஜிபக்ஷவினால் இன்று அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டதையடுத்து பொறுப்புக்களுக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்
செய்துகொண்டனர்
அந்தவகையில் கல்வி அமைச்சு வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு,
போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள்
பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கல்வி அமைச்சராக செயற்பட்ட பேராசிரியர்
ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக பதவிப்
பிரமாணம் செய்துகொண்டார்.
சுகாதார அமைச்சராக செயற்பட்ட பவித்ரா வன்னியாராச்சி, போக்குவரத்து
அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வெகுஜன ஊடக அமைச்சராக செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல, சுகாதார அமைச்சராக
பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்
ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெருமவும் நாமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும்
விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கு மேலதிகமாக, அபிவிருத்தி இணைப்பு பணிகள்
கண்காணிப்பு அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்
அத்தோடு, மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகே பதவிப்பிரமாணம் செய்து
கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 அமைச்சர்களும் சற்றுமுன்னர் ஜனாதிபதி
செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம்
செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post