இலங்கை அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் அவை ஒத்தி வைப்பு விவாதம் நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த விவாதத்திற்கு கட்சித் தலைவர்கள் அனைவரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ம் திகதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதிபர் தேர்தல்
நாடாளுமன்ற விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன((Mahinda Yapa Abeywardena) தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிபர் தேர்தல் நடத்தப்படும் கால வரையறை தொடர்பில் இன்று(11) அவை ஒத்தி வைப்பு விவாதம் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post