Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்: சுகாதார அமைச்சர் தகவல்

July 18, 2024
in இலங்கை, மருத்துவம், முக்கியச் செய்திகள்
இலங்கையை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்: சுகாதார அமைச்சர் தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

1300 வைத்தியர்களும் 500 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) நேற்று (17) விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது இலங்கையில் 24 ஆயிரம் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள் இதில் 3500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம்.

அரச வைத்தியசாலை

ஒவ்வொரு ஆண்டும் 3000 பேர் வைத்தியர்களாக வெளியேறுகின்றமையினால் அரச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்பக் கூடியதாக இருக்கின்றது.

தற்போது 24 ஆயிரம் வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர் எனினும் தற்போது துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறியமை பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனினும் கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10 – 15 வரையிலான வைத்தியர்கள் நாட்டுக்கு மீளவும் வருகை தந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

ரணிலுக்கு மகிந்தவிடம் இருந்து சென்ற நற்செய்தி

Next Post

திருகோணமலையில் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல்துறை அதிகாாரி கைது

Next Post
திருகோணமலையில் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல்துறை அதிகாாரி கைது

திருகோணமலையில் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல்துறை அதிகாாரி கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.