பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
பிரான்ஸ் அதிபர் தனது இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா நேற்று இரவு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post