அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நாட்டிற்கு ஒன்பது கப்பல்கள் வருகை தரவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் சுமார் இரண்டாயிரம் பயணிகளுடன் பாரிய கப்பல் ஒன்று கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு சொகுசு கப்பலான எம்.வி அசமாரா குவெஸ்ட் (MV Azamara Quest) டிசம்பர் 5 ஆம் திகதி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அறிவித்துள்ளது.
மென் சீப் 5 கப்பலின் வருகைக்குப் பின்னர், எம்.வி அசமாரா குவெஸ்ட் எனும் கப்பல் இந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பயணக் கப்பலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.
Discussion about this post