இலங்கையுடனான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞானம், தொழில்நுட்பம்,
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல
துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் ரஷ்யா ஆர்வமாக
உள்ளதாக தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடனான சந்திப்பின்போதே
அந்நாட்டு தூதுவர் யூரி பி. மேட்டேரி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நீண்டகால நட்பு மற்றும் ரஷ்யாவுடனான பரந்த ஒத்துழைப்பின்
முக்கியத்துவத்தை சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்பீரிஸ்
வலியுறுத்தினார்.பல்தரப்புக் கோட்பாடுகளில் கொள்கை மற்றும் சம்பந்தப்பட்ட
பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவுகளுக்காக
நன்றிகளையும் தெரிவித்தார்
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு
மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல துறைகளில்
இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளதாக
இதன்போது அந்நாட்டு தூதுவர் தெரிவித்தார்.
Discussion about this post