இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவானல் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சருமான கலாநிதி நாலக கொடஹேவா இதனைத் தெரிவித்தார்.
குறைந்தபட்சம் 100,000 அமெரிக்க டொலரை வர்த்தக வங்கியில் வைப்பிலிடும் வெளிநாட்டி னருக்கு 10 வருட காலத்துக்கு வதிவிட விசா வழங்குவதற்கான ‘கோல்டன் பரடைஸ் வீசா திட்டம்’ என்ற திட்டத்தை இலங்கை மத்திய வங்கி அங்கீகரித்துள்ளது.
குறைந்தபட்சம் 75,000 அ.டொலர் அல்லது அதற்கு மேல் கொண்டோமினியம் சொத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் வெளிநாட்டவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் முதலீட்டின் அளவைப் பொறுத்து 5 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட கால குடியிருப்பு விசாக்களை பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
மார்ச் 7, 2021 அன்று, நீண்ட கால வதிவிட விசா வழங்கும் முறையை மாற்றுவதற்கான புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Discussion about this post