இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால் தன்னையும், தனது குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்புத் தொடர்பில் திருப்தியடைய முடியவில்லை என்று தெரிவித்துள்ள விமலவீர, அரசியல் ஊடாக ஒரு ரூபா கூடச் சம்பாதிக்கவில்லை என்றும், உழைத்துச் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதால் இன்று வீடற்றவனாக மாறியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post