மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை தடையின்றிப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகேயிடம் அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளைத் தனியார் துறையினரிடம் இருந்தேனும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாளாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டுத் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்குது் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள மின்சார அமைச்சு பொருத்தமான திட்டங்களைத் துரிதமாகச் செயற்படுத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post