ரஷ்ய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரொருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹெலினா கேஸ்நெல்சன் என்ற 36 வயது பெண்ணின் முறைப்பாட்டை அடுத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரான ரஷ்யப் பெண் கடற்கரைக்கு அருகில் உடற்பயிற்சி செய்ய சென்றுகொண்டிருந்தபோது, சந்தேகநபர் இடைமறித்து பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வஸ்கடுவ, பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான திருமணமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post