எதிர்வரும் வாரத்தில் நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் கொழும்பு நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதுடன், முக்கிய நகரங்களிலும் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளில் தமது கற்கைகளை இணையவழியில் மேற்கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post