முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு (Hire) எடுக்கும் பயணிகள், குறிப்பாக நிகழ்நிலை செயலிகள் மூலம் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் பணம் செலுத்தாமல் விடுவது அதிகரித்து வருவதாக சாரதிகள் முறைப்பாடு அளித்துள்ளனர்.குறிப்பாக, வாடிக்கையாளர்கள் வாடகைக்கு முன்பதிவு செய்து பணம் செலுத்தாமல் இருப்பதில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக, ன அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalith Dharmasekara) நேற்று (21)தெரிவித்துள்ளார்.மேலும் சிலர், மகிழ்ச்சியில் சவாரி செய்து முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுக்க விரும்புவதாகவும் பின்னர் பணம் செலுத்துவதில்லை எனவும் கூறியுள்ளார்.
முச்சக்கர வண்டிஅந்தவகையில், சராசரியாக, ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த நிலையை எதிர்கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, முச்சக்கர வண்டி சாரதிகள் பணம் செலுத்தாத ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் காவல் நிலையத்தில் பதிவு செய்வதற்கு மணிக்கணக்கில் செலவழிக்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், முச்சக்கரவண்டி சாரதிகளின் தனிப்பட்ட உடமைகள் மற்றும் சாரதி இல்லாத போது முச்சக்கர வண்டியின் மின்கலங்கள் போன்ற உதிரிபாகங்கள் திருடப்பட்டுதல் அத்துடன் நிறுத்தப்படும் முச்சக்கரவண்டிகள் திருடப்படுன்றமை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருவதாக லலித் தர்மசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post