இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுவரையில் 58 வைத்திய அதிகாரி பிரிவுகள், அதிக ஆபத்தான வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்தில் 72 ஆயிரத்து 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த வருடத்தில், இந்தக் காலப்பகுதியில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், இந்த வருடத்தில் 40 ஆயிரத்து 998 நோயாளிகள் அதிகமாகப் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் 14 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவுகளில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மக்களைக் கோரியுள்ளது.
Discussion about this post