இலங்கையில் எரிபொருள் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலைகள் மறுசீரமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படும் என்று தெரியவருகின்றது.
இலங்கை தற்போதுள்ள சூழ்நிலையில் எரிபொருள் விலைகள் குறைவடைவதற்கான சாத்தியங்கள் இல்லாத நிலையில், எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 400 ரூபாவைக் கடந்துள்ள ஒரு லீற்றர் பெற்றோலின் விலை, திங்கட்கிழமைக்குப் பின்னர் 500 ரூபாவைக் கடப்பதற்குச் சாத்தியங்கள் உள்ளன என்று அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post