கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கு பலர் தயாராக இருப்பதால் அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி, தங்கியிருந்து சிகிச்சை பெறும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் பெரும் தொகை பணத்தை செலுத்த முடியாத மக்களுக்காக, இந்த சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அரச வைத்திய துறையில் வைத்தியர்கள் உட்பட ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் மிகச் சிறந்த சேவையை வழங்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
தனியார் வைத்தியசாலைகளை விட சிறந்த வைத்திய சேவையை அரச வைத்திய சாலைகளில் நோயாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Discussion about this post