இந்த நாட்களில் இலங்கையின் பல பகுதிகளில் கண் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மக்களை தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் இந்த கண் நோய் ஒரு விதமான வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறதாகவும் அதன் அறிகுறிகளாக கண்களில் வலி, கண்ணீர், கண் சிவத்தல், கண்களில் நீர் வடிதல் போன்றவை கூறப்பட்டுள்ளது.
மேலும், இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக விரைவாகப் பரவக்கூடியது என்றும் நோய்வாய்ப்பட்ட நபரின் கண்ணீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரப்புகளால் மட்டுமே இது நிகழ்கிறது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு பொதுவாக, இந்த வைரஸ் கண் நோய் இந்த நாட்களில் நிலவும் வானிலை நிலைமைகளுடன் பரவுகிறது.
தற்போது இந்த நோய் கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் பிள்ளைகளுக்கு பரவி வருகின்ற நிலையில் நோய் பரவும் இடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அறிவித்துள்ளார்.
Discussion about this post