குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளார்.
களனியைச் சேர்ந்த 20 வயதான ஒருவருரே குரங்கு அம்மை தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவர் கடந்த வாரம் டுபாயில் இருந்து நாடு திரும்பியுள்ளார் என்றும், அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இதுவரை இலங்கையில் 7 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
Discussion about this post