இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவினர்களுக்கு முழு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.
நினைவேந்தலை எவரும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, இறந்தவர்களின் ஆத்மாக்களைக் கொண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் எவரும் அரசியல் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.
தெற்குக்கு ஒரு நீதி, வடக்குக்கு ஒரு நீதி என்று இருக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், போரில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
Discussion about this post