டீசல் பற்றாக்குறையால் நாடு முழுவதும் பயணிகள் பஸ் சேவையை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை தொடர்ந்தால் நாளை தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலக நேரிடும் என்று அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு சில நாள்களுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளது என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post