இலங்கையில் நாளாந்தம் புகையிலை பாவனையால் 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,
இலங்கையில் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான 4 காரணங்களில் புகையிலை பாவனை பிரதான காரணமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள சிகரெட் பாவனையாளர்களின் மொத்த எண்ணிக்கை 1.5 மில்லியன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post