நீண்ட நேரம் மின்வெட்டால் 3G மற்றும் 4G வலையமைப்பில் குறுக்கீடு குறைப்பு அமைப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் வழங்கப்படாமையால், இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்படும் போது தொலைபேசி கோபுரங்களில் அவற்றின் 3G மற்றும் 4G குறுக்கீடு குறைப்பு அமைப்புகள் செயலிழக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 3G மற்றும் 4G போன்ற அதிவேகங்களில் தரவு பரிமாற்றத்திற்கு இந்த அமைப்புகள் அவசியம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
பொதுவாக டீசல் ஜெனரேட்டர்கள் இதற்கு பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன. அதிக மின்சாரம் தேவைப்படுவதால், அவற்றை இயக்குவதற்கு backup பட்டரி சக்தி போதுமானதாக இருக்காது. ஜெனரேட்டருக்கான டீசல் விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் நிலைமை சிக்கலடைந்துள்ளது.
இதன் விளைவாக 2G வேகத்தில் பெரிய ரிசீவர்கள் உள்ள பகுதிகளில் அலைவரிசைக் குறுக்கீடு ஏற்படுகிறது. ஆயினும் சாதாரண அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற சேவைகளுக்குத் தற்போது ஒரு பிரச்சினை இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மின் தடையின் போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படுவதை உறுதி செய்ய தேவையான டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக 3 ஆயிரம் லீற்றர் டீசல் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post