இலங்கையில் தட்டம்மை மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித
மஹிபால தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தொற்றா நோயாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோயானது
வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பரவத்தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“நோய்த்தடுப்பு என்பது உலகளாவிய ரீதியில் தற்போது பாரிய சவாலை சந்தித்துள்ளது, அந்தவகையில் தற்போது
மீண்டும் கொவிட்-19 தொற்றும் தீவிரமடைந்துள்ளது.
இது உலகளவில் தட்டம்மை நோயாளிகளை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை
போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களில் தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை அண்மையில்
அதிகரித்துள்ளது.
இதனால் இலங்கை மீண்டும் இந்த நோய்க்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டடுள்ளது.
இந்த எதிர்பாராத பின்னடைவை எதிர்த்துப் போராட, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய
அலுவலகத்தின் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஜெனீவா அலுவலகத்துடன் இணைந்து ஒரு சிறப்புத் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post