நாடளாவிய ரீதியில் அத்தியாவசியப் பொருள்களுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சிறுவர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான மருந்துப் பொருள்கள் மற்றும் மருததுவ உபகரணங்களை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறுபிள்ளை மருத்துவக் கல்லூரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. சிறுபிள்ளைகளுக்கான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசியமான சேவை வழங்கல் சுமுகமாக இயங்குவதற்கு அவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதாரத் துறை மிக மோசமான நிலைமையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிலைமை வெகு விரைவில் மோசமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post