பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (02-06-2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த நடத்துனர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர் பாணந்துறை டிப்போவில் கடமையாற்றும் நடத்துனர் என தெரியவந்துள்ளது.
Discussion about this post