நாட்டில் கொரோனாத் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த உயிரிழப்புக்கள் நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் அடங்குகின்றனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டில் தற்போது கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துள்ளது. நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்படும் நிலையில், நாளாந்தம் கொரோனா உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன.
Discussion about this post