இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி பெற்ற மூன்று நிறுவனங்களில் ‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மே மாத நடுப்பகுதியில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 45 நாட்களுக்குள் நடவடிக்கைகளைத் தொடங்க முடிவு
செய்ததாகவும் தெரிவித்தார். வணிக உரிமங்கள் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திகதிகள் மற்றும் தொடங்குவதற்கான நேரம் குறித்து நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும்
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மின்சக்தி
மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Discussion about this post