20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு பொருட்களுடன் கணவனும் மனைவியும் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
60 வயதுடைய கணவனும் அவரின் 57 வயதானமனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, பஹலவத்தயில் உள்ள சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து, வீடுகளை உடைத்து திருடப்பட்ட பொருட்களான சமையல் எரிவாயு சிலிண்டர்கள், சமையல் எரிவாயு அடுப்புகள், மின்சார உபகரணங்கள், சங்கீத உபகரணங்கள், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவரை குறித்த தம்பதியினர் பயன்படுத்தி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய இளைஞரை கைதுசெய்வதற்கான
விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Discussion about this post