கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிக கேள்வி நிலவுகின்றது என்றும், நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடவுச்சீட்டை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சேவையை வழங்குவதன் ஊடாகவே அதிகபட்ச கடவுச்சீட்டுகளை விநியோகிக்க முடிகின்றது, சாதாரண நடைமுறையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் அதிகபட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் 74 ஆயிரத்து 890 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி, பெப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 50 ஆயிரம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 82 ஆயிரத்து 506 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிப்போர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிகத்துள்ளது.
Discussion about this post