விசேட மருத்துவப் பயிற்சிகளுக்காக மருத்துவப் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக அவர்களுக்குக் கொடுப்பனவு செய்ய வெளிநாட்டு நாணயம் இல்லாத காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புறப்படுவதற்கு ஏற்பாடு செய்தவர்கள் பயிற்சியின் போது தங்கள் சொந்த நிதியை செலவுகளுக்குப் பயன்படுத்துவதற்கு உட்பட்டு தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.
அத்தகையவர்களுக்கு உதவித்தொகை பின்னர் சுகாதார அமைச்சகத்திடம் இருந்து மீள செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post